Social Master#1
Social Master
New Member
28/9/2018, 4:20 am
என்னுடைய பார்வைக்கு ஒரு ஆண் ஜாதகம் வந்தது. இந்த ஜாதகர் அரசியலில் ஈடுபட முடியுமா? மக்கள் செல்வாக்கைப் பெற முடியுமா? என்பது பற்றி உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

எனது கணிப்புப்படி மிகச்சிறந்த அரசியல் செல்வாக்கைப் பெறமுடியும் என்று நம்புகிறேன். இருப்பினும் உங்களுடைய மேலான கருத்துக்கள் எதிர்பார்க்கப் படுகிறது...

ஜாதகத்தை தெரிந்து கொள்ள இங்கே அழுத்தவும்.

Message reputation : 93% (15 votes)
தேவகண்ணி#2
தேவகண்ணி
New Member
11/10/2018, 10:51 pm
எனக்கு ஜோதிடம் தெரியாது. இருந்தாலும் தற்போது ஒரு நல்ல தலைமை தேவைப்படுகிறது. இந்த ஜாதகரால் அது அமையும் என்றால் சந்தோஷம் தான். வாழ்த்துக்கள்...

Message reputation : 83% (6 votes)
Ravi Kumar#3
Ravi Kumar
New Member
11/10/2018, 11:53 pm
இந்த ஜாதகத்தில் அரசியல் கிரகங்கள் எல்லாருமே சிறப்பாக அமைந்துள்ளன. அதாவது மக்கள் செல்வாக்கை குறிக்கும் சூரியன் உச்சமாக இருக்கிறார். அவரே லக்கின அதிபதியும் ஆகிறார். மேலும் லக்கினாதிபதி ஒன்பதாமிடமான பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் பெறுவது மிகச் சிறந்த அமைப்பு ஆகும்.

9ஆம் வீட்டின் அதிபதி செவ்வாய் 11ஆம் வீட்டின் அதிபதி புதனுடன் பரிவர்த்தனை பெற்று ஆட்சி பலத்துடன் இருப்பது இன்னும் சிறப்பு. காரணம் அரசியல் அதிகாரத்திற்கு செவ்வாய்தான் காரகன்.

இந்த ஜாதகத்தில் லக்கினாதிபதி சூரியன் உச்சம். 10ஆம் அதிபதி சுக்கிரன் உச்சம். செவ்வாய் புதன் பசிவர்த்தனை. மேலும் சந்திரன் விருச்சிகத்தில் நீசமடைவார். ஆனால் இந்த ஜாதகத்தில் விருச்சிகம் என்பது லக்கின கேந்திரமாகும்.மேலும் நான்காம் அதிபதி செவ்வாய் பரிவர்த்தனையில் இருக்கிறார். எனவே நீசபங்க ராஜயோகத்தை பெற்று உச்சனை விட அதிக பலமடைகிறார் சந்திரன். அரசியல் பலத்திற்கு சந்திரன் மிக முக்கிய கிரகமாகும்.

ஆக இந்த ஜாதகத்தில் மூன்று கிரகங்கள் உச்சமாகவும், இரண்டு கிரகங்கள் பரிவர்த்தனை பெற்று ஆட்சி பலமாகவும் இருக்கின்றன. எனவே ஜாதகர் மிகச்சிறந்த அரசியல் தலைவராகவோ, அல்லது அதற்கு சமமான அதிகார செல்வாக்குடனோ வாழ்வார் என்பதில் சந்தேகமே இல்லை. சந்திரன் நீசபங்கம் அடைந்துள்ளதால் முதலில் ஒன்றும் இல்லாத நிலையை கொடுத்து பிறகு மிகச்சிறந்த உயரத்திற்கு கொண்டு செல்வார்.

வாழ்க வளமுடன்.

Message reputation : 100% (5 votes)
மகிழ்மதி#4
மகிழ்மதி
New Member
15/10/2018, 2:39 am
சூரியன், புதன், குரு, கேது ஆகிய 4 கிரகங்கள் சிம்ம லக்கினத்திற்கு யோககாரகனாகிய செவ்வாயின் வீட்டில் இருப்பது அரசியல் சிறப்புக்கு உதாரணம் ஆகும்.

லக்கினத்திற்கு 5ஆம் அதிபதியும் குரு, ராசிக்கு 5ஆம் அதிபதியும் குரு. அதேபோல் சூரியனுக்கும், சந்திரனுக்கு இருபுறமும் ராஜகுரு மற்றும் அசுர குருவின் வீடு அமைந்துள்ளது. எனவே தனக்குத்தானே குருவாக செயல்படும் திறமை பெற்ற ஜாதகர்.சிம்ம லக்கினத்திற்கு புகழ், கீர்த்திக்குரிய சுக்கிரன் மீனத்தில் உச்சம் பெறுவது நல்ல பிரபலத்தை உண்டாக்கும்.

Message reputation : 100% (5 votes)
Zen Master#5
Zen Master
New Member
24/1/2019, 10:18 am
இந்தப் பதிவில் உள்ள ஜாதகத்திற்கான இணைப்பை என்னால் பார்க்க முடியவில்லை. தயவு செய்து எனக்கும் அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்....

Message reputation : 100% (1 vote)
GURU JI#6
GURU JI
New Member
23/3/2019, 8:02 am
லக்னமும், லக்னாதிபதியும் பலமாக இருந்தாலே அரசியலில் உயர்ந்த பதவி வகிக்கும் யோகம் கிடைக்கும். மேலும் கோச்சாரத்தை கணித்து விரிவாக எழுதுகிறேன்.

Message reputation : 100% (1 vote)
Subash M#7
Subash M
New Member
5/2/2020, 4:05 pm
தந்தை ஸ்தானம் என்னும் ஒன்பதாம் வீட்டில் தந்தை காரகனான சூரியன் இருப்பது காரகோ பாவ நாஸ்தி என்று சொல்லப்படுகிறது. ஜாதகரின் இளமைப் பருவத்தில் தந்தைக்கு கண்டம் ஏற்படலாம். அதே சூரியன் உச்ச பலத்துடன் இருப்பதால் இவரது தந்தை மிகுந்த புகழ் செல்வாக்கு பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் சூரியன் லக்கின அதிபதியாகவும் இருப்பதால் இது ஜாதகரையும் குறிக்கும். எனவே தந்தையின் புகழ் செல்வாக்கு அனைத்தும் இந்த ஜாதகருக்கும் அமையும். லக்கினம் மற்றும் பூர்வீக ஸ்தானமான ஐந்தாம் இடங்களை குரு பார்வை செய்வதன் மூலம் தந்தையை விட அதிக புகழை அடைவார். கடல்தாண்டிய புகழுக்கு சொந்தக்காரர் என்ற அமைப்ப உள்ளது.

9, 11 குடைய புதன் மற்றும் செவ்வாய் பரிவர்த்தனை பெறுவது அதிகாரத்தையும், அறிவுத் திறனையும் சமமாக வழங்கும் அமைப்பாகும்..

Message reputation : 100% (1 vote)
Sponsored content#8

அரசியல் யோகம் ஓர் அலசல்!!

Posted In: Eyes Line

Topic No: 108


Welcome:

Post your free thoughts on Facebox

Post no conditions, without approval

Unlimited number of posts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO