சோதிடத்தில் ஐந்தாம் இடம்

Posted In: Eyes Line

Topic No: 101

on 6/9/2018, 11:07 pm#1
Social Master
New Member
மனிதப் பிறவி என்பது நம்முடைய பூர்வஜென்மத்தில் நாம் செய்திருக்கக்கூடிய கர்மவினைகளின் பயனாகத்தான் ஏற்படுகிறது. அப்படி ஏற்படக்கூடிய நம்முடைய இந்த வாழ்க்கை எப்படி அமைய உள்ளது என்பதைத் தெரிந்துகொள்ளவும், தோஷங்கள் ஏதும் இருந்தால் சாஸ்திரரீதியான பரிகாரங்களைச் செய்து நன்மை அடையவும் நமக்கு வழிகாட்டுவது, ஒருவரின் ஜனன ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து எண்ணிவரும் 5-ம் வீடான புத்திரஸ்தானம் என்று சொல்லப்படும் பூர்வபுண்ணிய ஸ்தானம்தான்.

ஒருவரின் ஜனன ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தானத்தை நன்கு ஆராய்ந்து பார்த்தால், அவருடைய கடந்த பிறவி பற்றியும், அப்பிறவியில் அவர் செய்திருக்கக்கூடிய பாவபுண்ணியங்கள் பற்றியும் தெரிந்துகொள்ளலாம். அதுமட்டுமல்ல, அதன் விளைவாக இந்தப் பிறவியில் அவருக்கு ஏற்படக்கூடிய சுக துக்கங்கள்; லாப நஷ்டங்கள்; ஜாதகத்தில் இருக்கக்கூடிய தோஷங்கள் போன்றவை பற்றியும் துல்லியமாகச் சொல்லமுடியும்.

இந்த ஸ்தானத்தை பீஜஸ்புடம் போட்டுப்பார்ப்பதன் மூலம் ஓர் ஆண் ஆண்மைத்தன்மை உள்ளவரா என்பதையும், க்ஷேத்திரஸ்புடம் போட்டுப்பார்ப்பதன் மூலம் ஒரு பெண் பெண்மைத்தன்மை உள்ளவரா என்பதையும் சொல்லிவிடமுடியும். இந்த ஸ்தானத்தைக் கொண்டு ஒருவரின் பூர்வஜென்மம், மறுபிறவி, பிதுர்வகைச் சொத்துக்கள், பரம்பரைச் சிறப்பு, அனுபவிக்கும் சுகம், மனைவி, லாபம், தர்மகுணங்கள், ஜாதகருடைய முன்னோர்களில் யாருடைய பிரதியாக அவர் பிறந்திருக்கிறார் என்பதையும் துல்லியமாகச் சொல்லிவிடலாம்.
உடல் அமைப்பைப் பொறுத்தவரையில் வயிற்றின் மேல்பகுதி மற்றும் முதுகையும் குறிக்கும். பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் அமைந்திருக்கும் கிரகம், மேற்படி ஸ்தானத்தைப் பார்க்கும் கிரகம் ஆகியவற்றைப் பொறுத்தே ஒருவரின் வாழ்க்கை அமைகிறது.

Message reputation : 100% (1 vote)
SPONSORED CONTENT