ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்காக ஒதுக்கிய 342 ஏக்கர் நிலம் ரத்து!!

Posted In: Introduction

Topic No: 68

on 30/5/2018, 12:14 am#1
மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு நேற்று உத்தரவு பிறப்பித்தது.

இதற்கு முன்பாக ஆலை விரிவாக்கத்திற்கு அரசு அனுமதி அளித்ததை கண்டித்து மக்கள் எதிர்ப்பு தெரிவித்தும் கூட, சிப்காட் மூலமாக சட்ட விரோதமாக நிலம் ஒதுக்கீடு செய்ததாக புகார் எழுந்தது. மேலும் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் செய்யப்பட உள்ள 624 ஏக்கர் நிலத்தில், 324.23 ஏக்கர் நிலத்தை 99 வருட குத்தகைக்கு சிப்காட்டிடமிருந்து ஸ்டெர்லைட் நிறுவனம் பெற்றுள்ளது.

தற்போது ஸ்டெர்லைட் ஆலை மூடி சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில் விரிவாக்கத்திற்காக ஒதுக்கப்பட்ட கூடுதலான 342 ஏக்கர் நில ஒதுக்கீட்டையும் ரத்து செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்து, நிலம் கொடுக்க வாங்கப்பட்ட பணம் திரும்ப கொடுக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது. இது ஸ்டெர்லைட்டுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.[center]

Message reputation : 100% (1 vote)
SPONSORED CONTENT